பறவைக்கென்று ஒரு வட்டம்
அதற்குள் அதன் வாழ்க்கை
வானமும்
இருத்தலுக்காய் ஒரு கூடும்...
விலங்குக்கென்று ஒரு வட்டம்
அதற்குள் அதன் வாழ்க்கை
காடும் அது சார்ந்ததுமாய்..
மீன்களுக்கென்று ஒரு வட்டம்
நீரும் நீர் சார்ந்த இடமும்...
மனிதர்களுக்கென்று ஒரு வட்டம்
புவியும் புவிசார்ந்த இடமும்...
அதனதன் பாஷை
அதனதற்கு
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு..
ஒன்றன் பாஷை
இன்னொன்றறிவதும்
ஒன்றன் வாழ்க்கை
இன்னொன்று வாழ்வதும்
சாத்தியமில்லை...
அதனதன் வட்டங்கள்
விரிகின்றன சுருங்குகின்றன
ஆனால் உடைவதில்லை...
எதுவும் எதையும்
உருவாக்கவுமில்லை
அழிக்கவுமில்லை
கடவுளை நெருங்கிவிட்டேன்
என்று அடிக்கடி பீற்றும்
மனிதன் தவிர
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு.
27 comments:
ரொம்ப அழகா இருக்கு. கடைசி வரிகளும்.
//அதனதன் வட்டங்கள்
விரிகின்றன சுருங்குகின்றன
ஆனால் உடைவதில்லை.//
ம் ...நல்லாயிருக்குங்க ...
எதுவும் எதையும்
உருவாக்கவுமில்லை
அழிக்கவுமில்லை
கடவுளை நெருங்கிவிட்டேன்
என்று அடிக்கடி பீற்றும்
மனிதன் தவிர
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு.
அருமை. சொல்ல வந்ததை அழகாக சொல்லி விட்டீர்கள்
/மனிதன் தவிர
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு. //
இதுலதான் வாழ்க்கையைத் தொலைக்கிறதும்:(.
சூப்பர் அண்ணா...
கடைசி வரியில் கவிதை முழுமையாய் அர்த்தப்படுகிறது...
நல்லாயிருக்குங்க...
மனித பாஷை மட்டுமே எமக்குப் புரிகிறது.
அவன் தம்பட்டமும் புரிகிறது வேலு !
நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க..
அதே மாதிரி மனிதனைத் தவிர வேறு எவரும் பதிவுகள் எழுதுவதும், கொஞ்ச நாளில் இத்துடன் நான் பதிவுகள் எழுதாமல் விழகிக்கொள்கிறேன் என்று படம் காட்டும் பழக்கமும் இல்லை..
நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க..
அதே மாதிரி மனிதனைத் தவிர வேறு எவரும் பதிவுகள் எழுதுவதும், கொஞ்ச நாளில் இத்துடன் நான் பதிவுகள் எழுதாமல் விழகிக்கொள்கிறேன் என்று படம் காட்டும் பழக்கமும் இல்லை..
//எதுவும் எதையும்
உருவாக்கவுமில்லை
அழிக்கவுமில்லை
கடவுளை நெருங்கிவிட்டேன்
என்று அடிக்கடி பீற்றும்
மனிதன் தவிர
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு.//
உண்மை நண்பா...
நிஜம்தான் வேலு
அருமை நண்பரே
//அதனதன் வட்டங்கள்
விரிகின்றன சுருங்குகின்றன
ஆனால் உடைவதில்லை.//
நல்லாயிருக்கு.
நல்லாயிருக்குங்க.
//
எதுவும் எதையும்
உருவாக்கவுமில்லை
அழிக்கவுமில்லை
கடவுளை நெருங்கிவிட்டேன்
என்று அடிக்கடி பீற்றும்
மனிதன் தவிர
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு.///
ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்
உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
நன்றி விக்னேஷ்வரி
நன்றி நண்டு@நொரண்டு -ஈரோடு
நன்றி ரிஷபன்
நன்றி வானம்பாடிகள்
நன்றி அகல்விளக்கு
தங்கள் அறிவுரைக்கு நன்றி மாதவராஜ் சார்
வரிகளில் இனி கவனம் செலுத்துகிறேன்.
நன்றி கலாநேசன்
நன்றி ஹேமா
நன்றி பிரேமாமகள்
மனிதனைத்தவிர வேறுயாரும் பதிவுகள் எழுதுவதில்லை. படம் காட்டும் பழக்கமும் இல்லை
நன்றி கே.ஆர்.பி செந்தில்
நன்றி ஈரோடு கதிர்
நன்றி கரிசல்காரன்
நன்றி அம்பிகா
நன்றி ஆறுமுகம் முருகேசன்
நன்றி ஆனந்தி
தங்கள் விருதை பெற்றுக்கொண்டேன்
தங்கள் அன்பிற்கு நன்றி
அதனதன் வட்டங்கள்
விரிகின்றன சுருங்குகின்றன
ஆனால் உடைவதில்லை
:)))
Auramai super
மென்மையான வரிகள்,நறுக் கருத்துக்கள் மனதை தைக்கின்றன
கவிதை வரிகள்,லே அவுட் டிசைன் எல்லாம் நல்லாருக்கு.கொங்கு மண்டலம்னா சும்மாவா
சூப்பர்ங்க...
கவிதை வெகு இயல்பு.... பாராட்டுக்கள்.
(”பாஷை”க்கு பதிலாக ”மொழி”யை பயன்படுத்தினாலும் கவிதையின் கம்பீரம் குறயாதுங்க)
மிக மிக அருமை சகோதிரரே...
உண்மை..
சரியான வாழ்வியல் கவிதை ...!
நன்றி நரசிம்மன் நாலாயிரம்
நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி சிபி.செந்தில்குமார்
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி சி. கருணாகரசு
தங்கள் அறிவுரைக்கு நன்றி
நன்றி சகோதரி Gayathri
நன்றி தாராபுரத்தான்
உண்மை..
நன்றி pinkyros
//எதுவும் எதையும்
உருவாக்கவுமில்லை
அழிக்கவுமில்லை
கடவுளை நெருங்கிவிட்டேன்
என்று அடிக்கடி பீற்றும்
மனிதன் தவிர
அதனதன் வாழ்க்கை
அதனதற்கு. //
உண்மை தான் தல ...
Post a Comment