
நேற்றென் கனவில்
வந்தாய் காதலாய் .....
நிலவிருந்தது குளுமையாய்
காற்றிருந்தது தென்றலாய்
நெருப்பிருந்தது தீபமாய்
மண்ணிருந்தது பாண்டங்களாய்
பின்னொருநாளில்...
நிஜத்தில் வந்தாய் மனைவியாய்....
நிலவைச் சூரியனாக்கி
தென்றலைப் புயலாக்கி
தீபத்தை பெருநெருப்பாக்கி
என் மனமாம் வனத்தை அழித்துக்
கொண்டே செல்கிறாய்....
அனுமன் வால் பற்றி
எறிந்த இலங்கை போல
சிதலமாகிக்கொண்டே இருக்கிறேன்.....
இக்கவிதை உரையாடல் கவிதைப்போட்டிக்காக...
வந்தாய் காதலாய் .....
நிலவிருந்தது குளுமையாய்
காற்றிருந்தது தென்றலாய்
நெருப்பிருந்தது தீபமாய்
மண்ணிருந்தது பாண்டங்களாய்
பின்னொருநாளில்...
நிஜத்தில் வந்தாய் மனைவியாய்....
நிலவைச் சூரியனாக்கி
தென்றலைப் புயலாக்கி
தீபத்தை பெருநெருப்பாக்கி
என் மனமாம் வனத்தை அழித்துக்
கொண்டே செல்கிறாய்....
அனுமன் வால் பற்றி
எறிந்த இலங்கை போல
சிதலமாகிக்கொண்டே இருக்கிறேன்.....
இக்கவிதை உரையாடல் கவிதைப்போட்டிக்காக...