Tuesday, February 8, 2011

ஆதலினால் கல்யாணம் செய்.......?

காதலியின்
இதழ் ஊரும் அமுதம்
சுவைக்கக் கவ்வினேன்
கசந்தது
காலையில்
பல்விளக்க வில்லையாம்

பார்க் பீச்சென்று சுத்த
ஐந்து காந்திகள்
செலவாகிறது
அவள் பஸ்சார்ஜீம்
சேர்த்து.
எனினும் காதல்மேல்
பெரும் ஈர்ப்பு.

சினிமாவில் வருவதுபோல்
சாகசங்கள் செய்ய
எந்த வில்லனும் வரவில்லை,

எந்த எதிர்ப்பு வந்தாலும்
சமாளிக்கும் திடத்துடன்
அவள் தந்தைமுன்
அமர்ந்தவுடன் சொன்னார்,
மாப்ளே கல்யாணத்தை
சிம்பிளா கோவிலில்
வைத்துக் கொள்ளலாம்
வீட்டில கேளுங்க என்று.

பயந்தபடி
என் வீட்டில் சொல்ல,
அவங்க சொன்னமாதிரி
நாமளும் பத்துபேர்
போய் முடிச்சுக்கலாம்
என்றார் என் அப்பா
சுலபமாக.

இவ்வளவு எளிதாக
நம் வேலை
முடிந்து விட்டதே
என்ற சந்தோஷம்....
சினிமா வில்லனின்
கொடூரம்
பெற்றோரின் எதிர்ப்பு
அதிரடி சண்டைகள்
எல்லாம்
ஒரே உருவத்தில்
மனைவியாக வருமென்று
தெரியாமல்.




- என்னடா தலைப்பு வரவேயில்லையே

சரி சரி ஆதலினால் காதல், கல்யாணம்னு செய்யுங்க அல்லது செய்யாம போங்க அதெல்லாம் உங்க இஷ்டம், உங்க கஷ்டம்.

14 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு டைப்பாதான் இருக்கிறபோல.. சினிமாவை நம்மி இப்படிதான் மாட்டிக்கிறோம்.. என்ன பண்றது...

Ramani said...

பதிவின் கடைசிப் பத்தி ரொம்பப் பிரமாதம்
நம்பியார் அசோகன் பி.எஸ் வீரப்பா
அனைவரையும் ஒன்றாக்கியதைப்போல
மிக இயல்பாக சொல்லிவிட்டீர்கள்
ரசிக்கத்தக்க பதிவு தொடர வாழ்த்துக்கள்.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....... செம கலாட்டா!!!!

ஹேமா said...

ஏதாச்சும் நல்ல வழி சொல்லுவீங்கன்னு பாத்தா...!

Anonymous said...

Wow, What a wonderful kavithai...
I think this is your masterpiece.
I request you to show this to your wife. - Sakthi

ஷர்புதீன் said...

:)

சத்ரியன் said...

வேலு,

தங்கச்சி இந்த கவிதைய படிச்சுட்டுதா...?

டக்கால்டி said...

பினிஷிங் டச் அற்புதம்...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good :-)

குட்டிப்பையா|Kutipaiya said...

:D :D

செம ஃபினிஷிங் :)

Kalidoss said...

எப்படியும் எதிர் பார்த்தது ஒட்டு மொத்தமா கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

தலைப்பு வராவிட்டால் என்ன தலை தான் மாட்டிக்கிச்சே!!

dineshar said...
This comment has been removed by the author.
dineshar said...

ஹா..ஹா.. சூப்பர் போங்க...