Friday, July 9, 2010

வியாபாரமாய் எல்லாம் .....

விளையாட்டை யாரும்

விளையாட்டாய்

விளையாடுவதில்லை.....


கல்வியை யாரும்

அறிவிற்காய்

கற்பதில்லை....


கலையை யாரும்

ரசிப்பதற்காய்

பழகுவதில்லை.........


மருத்துவர் யாரும்

நோயளிக்காய்

மருந்தளிப்பதில்லை...


அரசுகள் ஏதும்

மக்களுக்காய்

அமைவதில்லை……


எல்லாமே

வியாபாரமாகி

விட்ட பொழுதில்….


தாய் தந்தை

மகன் மகள்

பாட்டன் பாட்டி…..

உறவுகளும் ஆகுமோ

வியாபாரமாய்?


16 comments:

soundr said...

வியாபாரமாயின
"பாசம்" என்ற பரிவர்த்தனையால்


http://vaarththai.wordpress.com

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படமே மிகவும் தெளிவாக சொல்கிறது கவிதையின் ஆதங்கத்தை . மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி !

rk guru said...

///விளையாட்டை யாரும்

விளையாட்டாய்

விளையாடுவதில்லை..... ///

அருமை

V.Radhakrishnan said...

வியாபாரத்தில் லாபம் நஷ்டம் இருக்கத்தான் செய்யும். எல்லாம் வியாபாரம்னு சொல்ல முடியாது அப்படிங்கிறது கூட வியாபாரம் தான்.

கே.ஆர்.பி.செந்தில் said...

உறவுகளும் ஆகுமோ
வியாபாரமாய்?

Already..

வானம்பாடிகள் said...

அது ஆயாச்சு எப்பவோ:(

பிரேமா மகள் said...

இன்னுமா அப்படி ஆகலைன்னு நினைக்கிறீங்க?

ஹேமா said...

உறவுகளும் வியாபாரம்தான் !

ஈரோடு கதிர் said...

கவிதை யாரும்
புரிவதற்காய்
எழுதுவதில்லை

(இஃகிஃகி.. என்னைச் சொன்னேன்)

கலாநேசன் said...

எல்லாமே வியாபாரம் (கொடுத்து வாங்கறது ) தான். பின்னூட்டம் உட்பட...?

அகல்விளக்கு said...

வியாபாரத்தின் வீரியம் புரிகிறது...

சி. கருணாகரசு said...

ஆமாம் ஆமாம்...
கடைசி கேள்விக்கு பதில்.... அவரவர் மனதை பொருத்தது.

padaipali said...

இப்போவே நம்ம ஆளுங்க, காலேஜ் ல பிரச்சினைப் பண்ணிட்டு, காலேஜ் ல அப்பன கூட்டி வரச்சொன்னா வாடகைக்கு அப்பன் ரெடி பன்றான்கோ நண்பா!!

VELU.G said...

நன்றி soundr

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி rk guru

நன்றி V.Radhakrishnan

நன்றி கே.ஆர்.பி. செந்தில்

நன்றி வானம்பாடிகள்

நன்றி பிரேமா மகள்

நன்றி ஹேமா

நன்றி ஈரோடு கதிர்

நன்றி கலாநேசன்

நன்றி அகல்விளக்கு

நன்றி சி.கருணாகரசு

நன்றி pdaipali

தனி காட்டு ராஜா said...

//தாய் தந்தை
மகன் மகள்
பாட்டன் பாட்டி…..
உறவுகளும் ஆகுமோ
வியாபாரமாய்?//

உணர்வு வியாபாரம் இது ...

தஞ்சை.வாசன் said...

இந்த வியாபாரத்தில் அன்பிற்கு(சூழ்நிலைக்கு) ஏற்ற விலையில் நிர்ணயிக்க படுகின்றது...

வாணிபம் ஆகிவிட்ட உறவுகள்... அன்பிற்கு விலை போக வேண்டிய உறவுகள் இன்று ஆடம்பரத்தில் விலை போய் கொண்டு...

உங்கள் வரிகள் அருமை...